free website hit counter

சுவிற்சர்லாந்தில் தமிழ் ஊடக மையம் அறிமுக நிகழ்வு

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் தமிழ் ஊடக மையம் அறிமுக நிகழ்வு எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை ( 26.05.24 ) நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சுவிஸ் தமிழ் ஊடக மையத்தினரால் இத்துறைசார்ந்த ஆர்வமுடையோருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வணக்கம்!

வரும் ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்துக்கு அருகாமையில் “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” அறிமுக நிகழ்வு நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு ஊடகத்துறை சார்ந்தோர், ஈடுபாடு உள்ளோர், கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளோர், ஊடகத்துறையில் பங்களிப்புச் செலுத்த விரும்புவோர். பொது அமைப்புக்களைச் சார்ந்தோர், பொதுமக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

* சுவிற்சர்லாந்தின் தமிழ் ஊடகத் துறையினரை ஒருங்கிணைத்தல்

* இரு மொழிச் சூழலில் தாயக வாழ்விட செய்திகளின் பாலமாக இருத்தல்.

* ஊடகத்துறையில் ஈடுபாடு உடையோருக்கு அது சார்ந்த சுவிஸ் அரச அங்கீகாரம் பெற்ற கற்கைகளுக்கான பரிந்துரையும் பயிற்சிகளும் வழங்கல்.

* நீண்ட அனுபவம் மிக்க ஊடகத்துறைசார் வல்லுனர்களூடான பயிற்சிப்பட்டறைகள். ஊடகத்துறை சார்ந்த இன்னும் பல விடயங்களை செயற்படுத்த உங்கள் மத்தியில் அறிமுகமாகின்றோம். அனைவரும் வருக! இலக்கு நோக்கி இணைந்து பயணிப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: