அஜித்தை அடுத்தடுத்து இயக்கி முடித்த சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்துள்ள படம் 'அண்ணாத்த'. இந்த படத்தில் ரஜினி பேச் ஒர்க் படப்பிடிப்பில் மட்டுமே இனி கலந்துகொள்ள வேண்டியுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷுடன் குஷ்பு, மீனா ஆகிய முன்னாள் கதாநாயகிகளும் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்துள்ளார். நகைச்சுவைக்கு சூரி, சதீஷ் இருவரும் ரஜினியுடன் இணைந்துள்ளனர்.
2021 பொங்கல் பண்டிகை ரிலீஸாக வெளியாகியிருக்க வேண்டிய இந்தப் படம், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தமுடியாத நிலையை கொரோனா அச்சுறுத்தலும் ரஜினியின் அரசியல் நுழைவும் உருவாக்கின. இருப்பினும் கொரோனா இரண்டாவது அலையின் பரவலுக்கு முன்னதாக பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் இயக்குநர் சிவா. பேச் ஒர்க்கைப் பொறுத்தவரை இன்னும் 3 நாட்கள் ரஜினி நடிக்க வேண்டும் என்கிறது இயக்குநர் வட்டாராம்.
ரஜினி அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் இதை முடிக்கத் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் அண்ணாத்த தீபாவளி வெளியீடு என்று மார்ச் மாதமே அறிவித்திருந்தனர். ஆனால் மூன்றாம் அலை வேகமெடுத்தால் திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்தாலும் வரும் நவம்பர் 4 தேதி தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துவிட்டனர். அதேபோல் விரைவில் முதல் தோற்றம் வெளியிட இருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.
Comments powered by CComment