free website hit counter

சென்னையை வணங்கிய தளபதி விஜய்யின் கதாநாயகி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தை இயக்கியிருப்பவர் நெல்சன் திலீப்குமார். அவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் ‘பீஸ்ட்’, இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. இதையடுத்து மே மாதம் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு பிரமாண்ட மால் போன்ற வணிக வளாகம் செட் ஒன்றை சென்னையின் பூந்தமல்லி பகுதியில் அமைத்துள்ளனர்.

ஆனால், இந்த செட்டில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமடைந்ததால் செட் அப்படியே இருந்ததால் பெயிண்ட் வண்ணம் மங்கிவிட்டது. தற்போது சென்னையில் கொரோனா தொற்று 200க்கும் கீழாக குறைந்துவிட்டதால் வணிக வளாக செட்டுக்கு வண்ணம் தீட்டும் வேலை மும்முரமாக நடந்து முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. இன்று முதல் 6 நாட்களுக்கு விஜய், பூஜா ஹெக்டே பங்குபெறும் பாடல் காட்சியை படமாக்குகிறார் இயக்குநர் நெல்சன்.

இந்த பாடலுக்கு நடன இயக்குநர் ஜானி டான்ஸ் கோரியோகிராபி செய்துள்ளார். இன்று பூஜா படப்பிடிப்புக்காக சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் இருகரம் குவித்து சென்னையை வணங்கிய புகைப்படம் சமுக வலைதளத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: