free website hit counter

சைக்கிள் கேப்பில் சாதனை செய்த விஜய் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இயக்குநர் ஏ.எல்.விஜய், தமிழ் சினிமாவின் முன்னாள் தயாரிப்பாளர்களில் ஒருவரான அழகப்பனின் மகன். இவரது தம்பி உதயா தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார். ஆனால், இவர் நடித்து இதுவரை ஒரு படம் கூட ஓடவில்லை.

ஆனால், நன்றாக நடிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார். தம்பி நன்றாக நடித்துமே, இதுவரை தனது படங்களை இதுவரை வாய்ப்பு வழங்காமல் இழுத்தடித்து வருகிறார் ஏ.எல்.விஜய். அமலா பாலை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து ஆனா பின்னர், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை மணந்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்ததும் அவர்களுக்கு மகனுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடியதும் அதற்கு அமலாபால் வாழ்த்துச் சொன்னதும் சமீபத்தில் செய்தியானது.

இந்நிலையில் ஏ.எல்.விஜய் குறித்து தற்போது ஒரு சூடான செய்தி கசிந்துள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கங்கனா ரனவத் நடிக்க ‘தலைவி’ என்ற மும்மொழிப் படமாக எடுத்தார். ஆனால், அது ஜெயலலிதா குடும்ப உறுப்பினர்கள் தொடுத்த வழக்காக சிக்கலில் இருக்கிறது. ஆனால் அதுபற்றி அலட்டிக்கொள்ளாத இயக்குநர் விஜய் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி தன்னுடைய அடுத்த படத்தை இயக்கியே முடித்துவிட்டார். ‘அக்டோபர் 31 லேடிஸ் நைட்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், மஞ்சிமா மோகன், மோனிகா ஜான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் பெண்களை மையமாகக் கொண்ட ஒரு கதையாகும். இதை முழுக்க முழுக்க ஓடிடி தளத்துக்காக எடுத்துள்ளாராம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction