free website hit counter

இயக்குனராக உருவெடுத்த விஜய் ஆண்டணி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என விஜய் ஆண்டனி, தற்போதைய தமிழ் சினிமாவில் பல வித்தைகள் காட்டும் கலைஞன்.

இசை இயக்குனராக, பல அதிரடியான வெற்றிபெற்ற ஆல்பங்களின் மூலம் புகழ் படைத்தவர். ஒரு நடிகராக ரசிகர்களிடத்திலும் விநியோக தளத்திலும் பெரும் வெற்றியை பெற்று, முன்னணி நடசத்திரமாக வலம் வருகிறார். தற்போது ‘பிச்சைக்காரன் 2’ மூலம் இயக்குநராக தனது அடுத்த பயணத்தை துவங்கியுள்ளார்.

நேற்று காலை சென்னையில், படக்குழுவினர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள மிக எளியமையான தொடக்க விழாவுடன் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பு துவங்கியது. தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இப்படத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்த, விஜய் ஆண்டனி மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். மேலும் இந்த சிறப்பு தருணத்தில் தமிழ் திரையை சேர்ந்த 17 இயக்குனர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர், ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குநர்கள் சசி (பிச்சைக்காரன்), பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்), ஜி.சீனிவாசன் (அண்ணாதுரை), கணேசா (திமிருபிடிச்சவன்), நவீன் (அக்னி சிறகுகள்), ஆனந்த கிருஷ்ணன் (கோடியில் ஒருவன்) ஆகியோருடன் தயாரிப்பாளர் தனஞ்செயன், ஃபெப்சி சிவா, கமல் போஹ்ரா, சித்தார்த், பி. பிரதீப் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் குத்துவிளக்கை ஏற்றி துவக்கி வைக்க, இயக்குனர் சசி கேமராவை ஆன் செய்தார், இயக்குனர் விஜய் மில்டன் முதல் ஷாட்டிற்கு கிளாப் போர்டைத் தட்டினார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: