free website hit counter

‘தல தீபாவளி’ அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த சில நாட்களாக #Thaladiwali என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது.

அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் வலிமைப் படக்குழு வட்டாரத்திலிருந்து நம்பகமான தகவல்கள் வெளியானதின் அடிப்படையில் இந்த ஹேஷ்டேக்கினை ரசிகர்கள் பிரபலப்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

இயக்குநர் வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் கடந்த 2 ஆண்டுகளாக நடித்து முடித்துள்ள படமான வலிமை அஜித்தின் பைக் ஸ்டண்டுகள் நிறைந்த ஒன்றாக உருவாகியுள்ளது. நேர் கொண்ட பார்வை படத்திற்கு பிறகு வினோத் - அஜித் கூட்டணியில், அஜித்தின் 60 வது படமாக உருவாகியிருப்பதுடன் போனி கபூர் மீண்டும் அஜித் படத்தின் தயாரிப்பாளர் ஆகியிருப்பதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை உருவாக்க கூடுதல் காரணங்கள் ஆகும். பட பூஜையின் போதே படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. 2019-ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2020-ஆம் ஆண்டின் துவக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய சண்டைக் காட்சிகள் மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. ரஷ்யாவில் சில பைக் சேஸிங் காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டு படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்துள்ளன. இதற்கிடையே அஜித்தின் அடுத்த படமான தல 61, எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைகிறது எனவும், இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கப்பட உள்ளதாகவும் சமீபத்தில் மற்றொரு தகவல் வெளியானது. இதனால் அக்டோபர் மாதத்திற்கு முன் வலிமை படத்தின் மிச்சமிருக்கும் சிறுசிறு வேலைகளையும் முடிக்கும்பணி தற்போது நடந்து வருவதாகவும். தீபாவளிக்கு படத்தை வெளியிடுவது என திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவிலிருந்து தகவல் கிடைக்கிறது.
 
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: