free website hit counter

நடிகர் ஜெய்யின் காதைத் திருகிய தளபதி விஜய்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தளபதி விஜய் நடித்த ‘பகவதி’ படத்தில் அவருக்குத் தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ஜெய்.

இவரது நடிப்பில் தற்போது பார்டி, சிவ சிவா, எண்ணித் துணிக உள்ளிட்ட பல படங்கள் தயாராகி இருந்தாலும் அவை இன்னும் வியாபாரம் ஆகவில்லை. திரையரங்குகளில் கூட்டம் இல்லாததால் தற்போது சின்ன ஹீரோ படங்களை வாங்க விநியோகஸ்கள் தயங்கி வருகிறார்கள்.

ஜெய்யின் படங்கள் வெளியாகவிட்டாலும் அவரை வைத்து படம் தயாரிக்க பல புதிய தயாரிப்பாளர்கள் முன்வந்தவண்ணம் உள்ளனர். தமிழ் நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் கொழித்த ஊழல் பணம் இதுபோன்டு பல வழிகளில் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதில் ஜெய்போன்ற கதாநாயகர்களுக்கு பம்பர் லாட்டரி அடித்து வருகிறது. அதனால் சில புதிய திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜெய்யிடம் சினிமா பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அவற்றில் ஒன்று ‘விஜய்யுடன் நட்பில் இருக்கிறீர்களா?’ என்பது.

அதற்கு பதிலளித்த ஜெய் “விஜய் சாருடன் பகவதி படத்தில் இணைந்து நடித்தது எனக்குப் பெருமை. அதன்பிறகு அவரின் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக இதுவரை அவரிடம் இதுவரை 150 முறைக்கு மேல் வாய்ப்பு கேட்டிருப்பேன். ஆனால், அவர் ‘நீ தான் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறாய் அப்புறம் ஏன் சின்ன கேரக்டர் செய்ய ஆசைப்படுகிறாய்.. ஒழுங்காக உன் மார்க்கெட்டை முன்னேற்றும் வழியைப் பார்’ கண்டிப்பாகக் கூறி என் காதையும் திருகி அனுப்பிவிட்டார்” என்று கூறி சிரித்தார்.
 
4தமிழ் மீடியாவுக்காக மாதுமை
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: