free website hit counter

விஜய்க்கு மீண்டும் தலைவலி கொடுக்கும் எஸ்.ஏ.சி! மாநாடு வெற்றி விழாவில் வில்லங்கப் பேச்சு!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிம்பு நடித்து, வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் ‘மாநாடு’. தமிழ்நாடு கடும் மழையிலும் வெள்ளத்திலும் சிக்கியிருந்த கடந்த 4 வாரங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அந்தப் படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் சிம்புவைத் தவிர படத்தில் பங்குபெற்ற அனைவரும் கலந்துகொண்டனர். ‘மாநாடு’ படத்தில் முதலமைச்சாராக நடித்தவர் இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். அவர், படத்தின் வெற்றி விழாவில் பேசியது பெரும் சர்ச்சை ஆகியிருகிறது.

அவர் இவ்விழாவில் பேசும்போது: “சுரேஷ் காமாட்சி ' மாநாடு ' திரைப்படம் மூலம் நன்றாக சம்பாதித்து விட்டார் . எனவே நட்சத்திர விடுதியில் கூட இந்த வெற்றி விழாவை கொண்டாடி இருக்க முடியும். நல்ல திரைக்கதை, நடிகர்களை உச்சத்தில் கொண்டுபோய் வைக்கும். ' மாநாடு ' படம் சிம்புவை நல்ல உயரத்திற்கு கொண்டுபோய் உள்ளது. எஸ்.ஜே.சூர்யா பேய் போல நடித்துள்ளார் .

கர்ணம் தப்பினால் மரணம் என்பது போல் உள்ள கதை தான் 'மாநாடு'. இதன் மூலம் புதிய ஜோனரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு. இப்படத்தில் வரும் மத அரசியல் காட்சி இந்தியாவையும், வாரிசு அரசியல் காட்சி தமிழ் நாட்டையும் இணைத்துள்ளது.

படத்தில் இசையை கேட்டு மிரண்டு போனேன், இளையராஜாவின் 2கே வெர்சன்தான் யுவன்சங்கர் ராஜா. இளையராஜா பல இயக்குநர்களிடம், என்னடா குப்பை போல படத்த எடுத்து வச்சுருக்க... என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அதுபோன்ற படத்திற்கும் தனது இசை மூலம் புதிய உயிரோட்டத்தை கொடுத்து விடுவார்.

வெற்றி வந்தாலும் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என, என் பிள்ளைக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். அதுபோல சுரேஷ் காமாட்சி அடக்கத்துடன் இருக்கிறார். தீப்பெட்டியில் உரசினால் தீக்குச்சிக்கு தான் எரியும், பெட்டி எரியாது. காரணம் திக்குச்சியின் மண்டைக் கனம்.

கடும் வயிற்றுப் போக்கின் இடையே மாநாடு படத்தின் சில காட்சியில் நடித்தேன். "நான் உங்களுக்காகவே உழைத்து..உழைத்து.." என வசனம் பேசி ஒரு காட்சியில் நடித்ததை தவிர நான் இந்த படத்தில் என்ன செய்தேன்..? ஆனால் அனைவரும் பாராட்டுகின்றனர்.

படத்தின் கதாநாயகன் சிம்பு இந்த நிகழ்ச்சிக்கு வராதது ஏன் என தெரியவில்லை... இன்று படப்பிடிப்பு இருந்தாலும் இங்கு அவர் வந்திருக்க வேண்டும், அவர் வராதது எனது மனதுக்கு கடினமாக இருக்கிறது. தயாரிப்பாளருக்காக அவர் வந்திருக்க வேண்டும். நடிகர்கள் வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது, படப்பிடிப்பில் நடந்து கொண்டதை போலவே, படம் வெளிவந்த பிறகும் இருந்தால் தான் நடிகர்களுக்கு வெற்றி தொடரும்.

இதுவரை மூன்று படங்களில் முதலமைச்சராக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்க முடியவில்லை. ஏனென்றால் காமராசருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை.” என்று கூறி பேச்சை முடித்தார். தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சரை பலரும் பாராட்டிவரும் நேரத்தில் இவரது சர்ச்சை பேச்சு விஜய்க்கு மீண்டும் தலைவலியை உருவாக்கியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction