free website hit counter

மீண்டும் வந்தார் லைலா !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரசிகர்களின் உள்ளங்களில் தங்களுடைய தனித்துவமான நடிப்புக்காக இடம் பிடித்த நட்சத்திரங்களே காலம் கடந்தும் நினைவில் கொள்ளப்படுகிறார்கள். அப்படியொருவர் லைலா.

தமிழில், 'கள்ளழகர்', 'முதல்வன்', 'தில்', 'மவுனம் பேசியதே', 'உன்னை நினைத்து', 'பிதாமகன்', உட்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் லைலா. தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்து வந்தார். கடைசியாக 'திருப்பதி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இயக்குநர் பாலாவை அவர் காதலிப்பதாக சிலர் கிளப்பிவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர் மெஹ்தின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். மெஹ்தின் - லைலா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் 16 வருடத்துக்குப் பிறகு லைலா மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பியிருக்கிறார். கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் முக்கிய வேடத்தில் அவர் நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கின்றனர். சங்கி பாண்டே, முரளி சர்மா, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கிறார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: