free website hit counter

தீபாவளிக்கு வெளியாகும் அஜித் படம் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இதுவரை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களில் அஜித்தை இயக்கினார் ஹெச்.வினோத். தற்போது, போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் அவருடைய 61வது படத்திற்காக மூன்றாவது முறையாக இந்த மூவரும் இணைந்திருக்கிறார்கள்.

முழுவதும் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இதன் கதைக்களம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டது என்கிறார்கள். ஜிப்ரான் படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார். படத்தில் பாடல்கள் இருக்காது என்று வினோத் தரப்பில் கூறியுள்ளனர்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் பெரும்பகுதி ஹைதராபாத்திலும் நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் முதலில் அஜித்துடன் தபு இணைவதாக சொல்லப்பட்டது. ஆனால், பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். இதனை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மஞ்சு வாரியார் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இந்தப் படத்தில் சமுத்திரக்கனியும் இணைந்துள்ளார். இந்நிலையில், போனி கபூர் தயாரிப்பில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் இந்த வாரம் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் போனி கபூர்.

அதில் 'அஜித்61' படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதுவரை, 35 நாட்களுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஜூலை அல்லது செப்டம்பர் மாத முடிவுக்குள் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து அக்டோபர் 10 தேதிக்குள் அதன் பின் தயாரிப்புப் பணிகளை முடித்து 2022 தீபாவளிக்கு வெளியீடு செய்ய இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். போனி கபூர் பகிர்ந்துள்ள இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: