free website hit counter

பலமொழிப் பாடகர் கே.கே மறைவு !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கேகே என்று அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்அவர் திடீரென மயங்கி விழுந்த போது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்கையில் உயிரிழந்துள்ளார் என அறியவருகிறது. கேகே என்று அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கேரளாவை சேர்ந்த 53 வயதான பாடகர். தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் இசையில் காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க) உள்ளிட்ட பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்நிலையில், கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே, ரசிகர்கள் முன்னிலையில் பாடல்களை பாடினார். தவிர ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction