free website hit counter

நீதிமன்றதிற்கு ரகசியமாக வந்த இயக்குனர் ஷங்கர்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜரானார்.
ஷங்கர் 3 மணி நேர விசாரணைக்கு பிறகு ஊடகத்தினர் கண்ணில் படாமல் பின் வாசல் வழியாக வாடகை காரில் ஏறிச் சென்ற நிலையில் மறுபடியும் அவரை விசாரணைக்கு அழைத்திருக்கிறது அமலாக்கத்துறை.

ஜென்டில்மேன், இந்தியன், சிவாஜி, எந்திரன் உட்பட பல தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். இவர் கடந்த வியாழன் மதியம் தனது வழக்கறிஞருடன் சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை சென்னை மண்டல அலுவலகத்தில் வழக்கு ஒன்றிற்காக விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை துணை இயக்குநர் மல்லிகா அர்ஜுனா முன் ஆஜரான இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

சட்டவிரோத பணபரிமாற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அது என்ன வழக்கு என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கூற மறுத்து விசாரணைக்கு பின்னர் வழக்கு குறித்த விவரங்களை தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இயக்குநர் ஷங்கர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையிலே அமலாக்கத்துறை அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜரான தகவல் அறிந்து பல ஊடகத்தினர் அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர். ஷங்கர் தனது இன்னோவா காரில் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஊடகத்தினர் குழுமியிருந்ததை அறிந்து கொண்ட இயக்குநர் ஷங்கர் விசாரணை முடிந்த பிறகு ஊடகத்தினரின் கண்ணில் படாமல் அமலாக்கத்துறை அலுவலகத்தின் பின்வாயில் வழியாக வாடகை காரில் புறப்பட்டு போய்விட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction