காஷ்மீரில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனை கெடுக்க முயற்சி நடப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், பயங்கரவாத தாக்குதல் சம்பவம்கடுமையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்களையும், அதன் பின்னால் உள்ளவர்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இது
போன்று மீண்டும் செய்ய கனவில் கூட நினைக்கக்கூடாது என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.