“தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள்” என்று ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ் செய்துள்ளார். மே 1-ம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’.
இதன் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, “‘ரெட்ரோ’ பார்த்துவிட்டேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். கண்டிப்பாக முந்தைய 45 படங்களை விட வேறு மாதிரி இருக்கும் என தெரிவித்தார்.
உங்களிடம் இருந்து கிடைக்கும் இந்த அன்புக்காக கண்டிப்பாக உங்களை மகிழ்விக்க கூடிய வித்தியாசமான படங்கள் செய்வேன் எனவும் இரண்டரை மணி நேரம் நீங்கள் திரையரங்கு வந்தால் உங்களை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டுமோ செய்வேன் என்றும் சூர்யா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேச்சை முடிக்கும் முன்பு, “இப்படத்தின் காட்சிக்காக மட்டுமே சிகரெட் பிடித்தேன் என கூறிய நடிகர் சூர்யா, நிஜ வாழ்க்கையில் யாரும் தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள் கேட்டுக்கொண்டார்.