free website hit counter

இசைஞானி இளையராஜா இசையில் வெளிவரும் ஈழத்துத் திரைப்படம் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈழநிலத்தின் நெய்தல்கரைக் கதையோடு வரும், ஈழத்துச் சினிமாவிற்கு வரலாற்றில் முதல் முறையாக, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.

இதுமட்டுமன்றி, ஈழத்துச் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, தமிழ், சிங்களம், மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகி, இலங்கை , இந்தியா, மற்றும் உலகெங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது எனும பெருமைகளுடன் வரும் திரைப்படம் 'அந்தோனி'

.

இசைஞானியின் இசைத் தாலாட்டுடன் வரும் 'அந்தோனி' திரைப்படத்தின் முதற்பார்வைச் சுவரொட்டிகள் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டள்ள. இதன் தமிழ் பதிப்பினை, நடிகர் துல்கர்சல்மான், இயக்குனர் சீனு ராமசாமி, இயக்குனர் லெனின் பாரதி, இயக்குனர் தமிழ், ஆகியோர் வெளியிட்டு வைத்தனர். 

ஈழத்தினைப் பூர்வீகமாகக் கொண்ட, 'கயல்'வின்சென்ட், டி.ஜே.பாணு, பிரதான பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குனர்கள் ஜெனோஜன், சுகிர்தன், எழுதி இயக்கியுள்ளார்கள். கலைவளரி ரமணதாஸ், சுகந்தினி தயாரிப்பிலும், மற்றும் விஜய் பாலசிங்கம், ஸஜ்கந்தராஜா விக்கி ஆகியோரின் இணைத்தயாரிப்பிலும் உருவாகியுள்ளது 'அந்தோனி' திரைப்படம். மிகுந்த பொருட் செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தினை சமகாலத்தில், மும்மொழிகளிலும் வெளியீடுவதற்கான பணிகளை மேமற்கொண்டு வருவதாகத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: