free website hit counter

யுவன் - சிம்புவின் இசைக் கொண்டாட்டம் ஜூன் 21 -ல்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இளைமைக் கொண்டாட்டம் மிகுந்த இசையைத் தருவதில் ஜூனியர் மேஸ்ட்ரோ என ரசிகர்களால் கொண்டாடப்படும் யுவன் ஷங்கர் ராஜா.

அவருடன் துள்ளல் நாயகன் சிம்பு கூட்டணி அமைத்தால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே இசைக்கொண்டாட்டம்தான். ஏனென்றால் இவர்கள் இணையும்போது இசையின் துள்ளல் இரட்டிப்பாகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதை மெய்பிப்பதுபோல மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், சிலம்பாட்டம், வானம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களில் சிம்பு - யுவன் இந்த கூட்டணியின் இசையில் இளமை பொங்கி வழிந்தது.

குறிப்பாக, மூத்த ரசிகர்களால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான ‘எவண்டி உன்ன பெத்தான்', ‘என் ஆசை மைதிலியே’, ‘காதல் வளர்த்தேன்’, ‘லூசுப் பெண்ணே’ என ஹிட்டாவது மட்டுமல்ல, உறுதியாக டிரெண்ட் ஆவதும் வழக்கம். அப்படிப்பட்ட இக்கூட்டணி தற்போது மாநாடு படத்துக்காக இணைந்திருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் பின்னணி இசைக் கோக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மத அரசியலை மையமாகக் கொண்டு தயாராகியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார்.

இவரைத் தவிர்த்து எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மாநாடு படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானபோது, அதில் சிம்பு அப்துல் காலிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், மாநாடு படத்தின் முதல் சிங்கிள் பாடல் வருகிற ஜூன் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதை படத்தின் தயாரிப்பாளரும் இசையமைப்பாளரும் உறுதி செய்துள்ளனர். இதைக் கொண்டாட சிம்பு -யுவன் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction