free website hit counter

அஜித் ஆலோசகராக இருக்கும் தக்‌ஷா குழுவின் அதிரடி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தல அஜித் குட்டி விமானங்களைப் பறக்கவிடுவதை, கார் பந்தயங்களை விட்டபிறகு ஒரு போதுப்போக்காக செய்து வருகிறார்.

தற்போது அஜித் தொழில்நுட்ப ஆலோசகராக செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அடங்கிய தக்‌ஷா குழு திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இக்குழு உருவாக்கிய ட்ரோன்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து, சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பயன்படுத்த இன்று நெல்லையில் முன்னோட்டம் பார்க்கப்பட்டது.

ரோட்டரி கிளப் நிதி உதவியுடன் இயங்கும் தக்‌ஷா மாணவர் குழுவிடம் பல வகையான ட்ரோன்கள் இருக்கின்றன. விவசாயத்துக்காகவும், சர்வைலன்ஸ்காகவும் இவை பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது தமிழக அரசுடன் இணைந்து, நோய்த் தொற்றை தவிர்க்கும் வகையிலும், கொரோனா ஒழிப்பு பணியிலும் முக்கியமாக துப்பறவு பணியாளர்கள் அதிகம் செல்லமுடியாத இடங்கள், கோரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்க ட்ரோன்களை பயன்படுத்த ஆயத்தமாகி வருகிறார்கள். இதற்கான சோதனை இன்று நெல்லையில் வெற்றிகரமா நடைபெற்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction