லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்னும் 100 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ஸ்பெஷல் வீடியோவை பகிர்ந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் ‘கூலி’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனிருத் இசையமையமைக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியாகி
நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தொடர்ந்து இப்படத்தில் நடித்து வரும் நடிகர்களின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியானது. அதன்படி இப்படத்தில் நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் நாகர்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர்
உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இதையடுத்து இப்படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு
அறிவித்தது. ஆனால் அவர் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதாக தகவல் வெளியானது. தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் கூலி திரைப்படம் இன்னும் 100 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் “அரங்கம் அதிரட்டுமே, விசிலு பறக்கட்டுமே..” என்ற பின்னணி பாடல் இடம்பெற்றுள்ளது