தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நல பாதிப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 67.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில் கவுண்டமணியின் மனைவி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடிகர் கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினார். கவுண்டமணி தனது மனைவியான சாந்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு செல்வி, சுமித்ரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.