இந்தியாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் தர்மேந்திரா மறைந்தார். அவர் தனது 89ம் வயதில் காலமாகியுள்ளார்.
இந்தித் திரையுலகில், அமிதாப்பச்சன், ராஜேஷ் கண்ணா ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் விரும்பப்பட்டவர். இவர் நடித்த பல படங்கள், தமிழ்ச் சினிமாவில் உருமாற்றம், மொழிமாற்றம் பெற்று வந்தன.
60 களில் பிரபலமாக இருந்த அவர், தமிழகத்தைச் சேர்ந்த ஹேமமாலியினை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர ஜோடிகளின் இணைவில் இந்தித் திரையுலகில் பலமான வரவேற்பைப் பெற்றிருந்தது. இவர் இந்தி அரசின் அதி உயர் விருதான பத்மபூஷன் விருதினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
