free website hit counter

ஏவிஎம் சரவணன் மறைந்தார் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன் மறைந்தார். தமிழகத்தில் மிகப் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ஸ்டூடியோ.

இதன் தயாரிப்பாளராகளில் ஒருவராக இருந்தவர் ஏவிஎம் சரவணன்.1939ம் ஆண்டில் பிறந்த இவர், தனது 86 வயதில் மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். வெள்ளை நிற ஆடை, கைகளைக் கட்டிய தோற்றம், எப்போதும் பணிவு என்பற்றைத் தனது வாழ்வியல் பண்பாகவும் தோற்றமாகவும் கொண்டிருந்தவர் சரவணன்.

18  வயதில் ஏவிஎம் ஸ்டூடியோவின் பணிகளில் இணைந்த அவர், ஏவிஎம் ஸ்டூடியோ நிர்வாகம், படத்தயாரிப்பு, விநியோக உரிமை, திரையரங்குகளில் படங்களை வெளியிடுவது என அனைத்துத் துறைகளிலும் அவர் பணியாற்றியவர். இது தவிர தமிழகத்தில் மட்டுமல்லது, இந்திய சினிமாத்துறை சார்ந்தும் முக்கிய பொறுப்புக்களை வகித்தவர் என்பதும், பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர் என்பதும்  குறிப்பிடத்தக்கது. 


அன்னாரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula