free website hit counter

வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட துல்கர் சல்மான்

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளி ‘குரூப்’ என்பனின் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குரூப்’. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு விசயமும், ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் ‘குரூப்’ படம் பற்றி துல்கர் சல்மான் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர்: இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் என்னுடன் இணைந்து தான் திரைத்துறைக்கு வந்தார். நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள், எங்களது முதல் படத்திலேயே ‘குரூப்’ பற்றி நிறைய விஷயங்களை பேசிக்கொண்டிருப்பார். எப்படியாவது இந்தப்படத்தை நான் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொன்னார். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க முடியுமா என்று எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் சில வருடங்கள் முன் குரூப் ஒரு நல்ல திரைக்கதையாக வந்திருக்கிறது என்று சொன்னார். திரைக்கதை ஸ்டைலே புதிதாக இருந்தது. கண்டிப்பாக இப்படத்தை பண்ணவேண்டும் அப்போதுதான் முடிவு செய்தோம். பலரும் வேலியில் செல்லும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கொள்கிறீர்கள் என்று தடுத்தார்கள். காரணம், குரூப் குடும்பத்திலிருந்து பிரச்னை வரும், படத்தை எடுக்கமுடியாது என்று சொன்னார்கள்.

நல்ல வேளை எந்த ஒரு தடையும் வரவில்லை! ஆனால் விக்டிம் குடும்பத்திலிருந்து எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம். படம் உருவான பிறகு அவர்களை அழைத்து, படத்தைப் போட்டுக்காட்டினோம். உங்களுக்கு தவறாக எதாவது தோணினால் சொல்லுங்கள் மாற்றி விடுகிறோம் என்றோம். அவர்கள் மனதின் வலியை வைத்து கொண்டு பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமில்லை. அவர்களுக்கு படம் பிடித்திருந்தது. அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். இந்தப்படத்திற்குப்பின் கடும் உழைப்பு இருக்கிறது. மூன்று வருட ஆராய்ச்சிக்கு பிறகு தான் திரைக்கதையெய் அமைத்தேன். ஒவ்வொரு நடிகர்களுமே உண்மையில் வாழ்ந்தவர்களை பிரதிபலித்துள்ளார்கள். அந்த கால கட்டத்தை கொண்டு வருவது எல்லாம் மிக கடினமாக இருந்தது. அந்த கால மும்பையை எல்லாம் திரும்ப திரையில் கொண்டு வந்திருக்கிறோம். ‘குரூப்’ எனக்கு மிக சவாலாக இருந்த படம் என் வாழ்வில் மிக முக்கியமான படமும் கூட. ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும் என்றார். ‘குருப்’ திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நவம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction