free website hit counter

Sidebar

04
ஞா, மே
58 New Articles

வெங்கட் பிரபுவுக்கு செக் வைத்த கவிதாலயா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாநாடு படத்தின் வெற்றியால் திக்குமுக்காடிப்போனவர்களில் ஒருவர் அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு.

காரணம் இந்தப் படம் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதையடுத்து வெங்கட் பிரபுவுக்கு பட வாய்ப்புக்லள் குவிந்தன. அவற்றில் தனக்கு 11 கோடி சம்பளம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ள திருச்சியைச் சேர்ந்த தயாரிப்பாளருக்காக ’மன்மத லீலை’ என்கிற படத்தை இயக்க இருக்கிறார். இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி வெங்கட் நடிக்கிறார்கள். மன்மத லீலை கே.பாலச்சந்தர் இயக்கிய படத்தின் தலைப்பு.  இந்த தலைப்பை வெங்கட்பிரபு பயன்படுத்தக்கூடாது என்று கே.பாலச்சந்தர் ரசிகர் மன்ற செயலாளர் கவிதாலயா வி.பாபு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 1976ம் ஆண்டு, கலாகேந்திரா நிறுவனத்தின் கோவிந்தராஜன், துரைசாமி,தயாரிப்பில்,கே.பாலசந்தர்  கதை, திரைக்கதை,வசனம், இயக்கத்தில் உருவான படம் மன்மத லீலை. இந்த படம் வெளியாகி 46 ஆண்டுகள் ஆகிறது. மன்மத லீலை என்கிற பெயரை, கலா கேந்திரா தயாரிப்பாளர்களின் அனுமதி இல்லாமல், வெங்கட்பிரபு தான் இயக்கும் படத்திற்கு வைத்துள்ளார். இது தவறான செயலாகும். கலாகேந்திரா நிறுவனத்தார்களிடம் பேசி,அனுமதி பெறாமல் இதே பெயரில் திரையிட்டால், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் கடுமையாக  எதிர்க்கும். கலா கேந்திரா நிறுவனத்தார்கள், சட்ட ரீதியாக நீதிமன்றம் நாடி நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை வெளிவருவதற்கு முன்பு நடந்த விவகாரமே வேறு. கடந்த 5 நாட்களுக்கு முன் மன்மத லீலை படத்துக்கான முதல் பார்வை வெளியாகும் முன்பே கவிதாலாயாவின் தற்போதைய முதலாளியும், கே.பாலசந்தரின் மகளுமான புஷ்பா கந்தசாமியிடம் முறைப்படி படத்தின் தலைப்பைக் கேட்டு படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. தலைப்புக்கு 5 லட்சம் வரை கொடுக்கலாம் என்பது தயாரிப்பாளரின் பட்ஜெட். ஆனால், புஷ்பா கந்தசாமி தரப்பில் 15 லட்சம் தரும்படி கேட்டத்துடன், இதில் பேரம் பேசக்கூடாது என்றும், கேபியின் மன்மத லீலையிலிருந்து கருப்பு வெள்ளை காட்சியின் கிளிப் படத்தில் எங்காவது பயன்படுத்த விரும்பினால் அதற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூற கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

இருதரப்புக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிச் சமாளித்தாலும் ‘மன்மத லீலை’ தலைப்புக்கு கலாகேந்திராவை தயாரிப்பாளர் அணுகியதும் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்பதும், இப்போது சினிமாவே தயாரிக்காதவர்களிடம் எதற்குப் பணம் கொடுத்து டைட்டில் வாங்க வேண்டும் என்றும் இருதரப்பிலும் தயாரிப்பு நிர்வாகிகள் காரசாரமாகப் பேசிக்கொண்ட ஆடியோ, தற்போது பூனைக்குட்டியாக வெளியே வந்துவிட்டது. சினிமாவே கோரானாவல் குதறப்பட்டு கிடக்க இவையெல்லாம் கோலிவுட்டில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எல்லாம் பணம் என்று குமுறுகிறார்கள் ரசிகர்கள்.

4தமிழ் மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula