இந்தியாவில் வெளியாகி பாரிய வெற்றி அடைந்த RRR படத்தின் பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.
RRR திரைப்படத்தில் இடம்பெற்ற கீரவாணி இசையில் சந்திபோஸ் வரிகளில் உருவான 'நாட்டு நாட்டு' பாடல், சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
சிறந்த பாடல் பிரிவில் இந்திய திரைப்பட பாடலொன்று ஆஸ்கார் விருது வெல்வது இதுவே முதல் தடவையாகும்.
சந்திபோஸ் வரிகளில், கீரவாணி இசையில் உருவான இப்பாடலை ராகுல் சிப்லிகுனி, காலா பைரவா ஆகியோர் பாடியிருந்தனர்.
பிரமாண்டங்களை ஏற்படுத்தும் ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் கடந்த ஜனவரி மாதம் கோல்டன் குளோப் விருதையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.