free website hit counter

கோலிவுட்டை உலுக்கிய இரண்டு கொரோனா மரணங்கள் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் சினிமா உலகத்தை இரண்டு கொரோனா மரணங்கள் கிடுகிடுக்க வைத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று 46 வயதே நிரம்பிய இளம் வளரும் வில்லன் நடிகரான நிதிஷ் வீரா சிகிச்சை பலனின்றி காலமாகியிருப்பது.

தனுஷுடன் புதுப்பேட்டை, விஷ்ணு விஷாலுடன் வெண்ணிலா கபடி குழு, தனுஷுடன் மீண்டும் புதுப்பேட்டை, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இயல்பான நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்று வந்தார். முதல் அலைக் கொரோனாவில் சக நண்பர்கள், தனது நட்பு வட்டத்தில் உள்ள பல உதவி இயக்குநர்களுக்கு கேட்காமலேயே நடிகர் நிதிஷ் வீரா உதவிகள் செய்து வந்தார். தற்போது இரண்டாம் அலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பலியாகியிருப்பதில் அவரது நண்பர்களும் தனுஷின் வட்டாரமும் அதிர்ந்துபோய் உள்ளது.

அதேபோல, கபாலி படத்துக்காக ‘நெருப்புடா’ பாடலை எழுதிப் பாடியவரும், ‘கனா’ படத்தின் மூலம் ஒரு கிராமத்துப் பெண், பெண்கள் கிரிக்கெட்டில் சாதிக்கும் தன்னம்பிக்கை மிக்க கதையை திரைப்படமாகவும் எடுத்தவர் அருண் ராஜா காமராஜ். இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கி நண்பர். அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவும் திரைக்கதை எழுதி வந்ததுடன் கணவரின் பட முயற்சிகளுக்கு பெரும் பேரளவில் கைகொடுத்து வந்தவர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்திருக்கிறார். இவருக்கு வயது வெறும் 41 மட்டுமே.. திரையுலகம் மட்டுமல்ல தலைநகர் சென்னை கதறிக்கொண்டிருக்கிறது.

நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் @Arunrajakamaraj அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு, ஆழ்ந்த இரங்கல் என உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி தெரிவித்துள்ளார்.  உதயநிதி துணிந்து கொரோனா நோயாளிகளை சந்துத்து ஆறுதல் கூறுதல் இறப்புகளில் கலந்துகொள்ளுதல் ஆகிவற்றில் தொடர்ந்து கலந்த வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction