free website hit counter

அட என்னடா..! நம்ம ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் சினிமாவில் கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’ படத்தில் நடிது தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது தெலுங்குப் படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். அவருக்கு தற்போது வந்த சோதனை பரிதாபகரமானது. சமூக வலைதளங்களில்.. ‘ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது. ஆனால் நல்ல மனது இல்லை’ என்று ஒரு நெட்டிசன் வருந்தும் அளவுக்கு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடந்தது இதுதான், சமீபத்தில் ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியொன்றில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுமி அவரிடம் பசிக்குது அக்கா ஏதாவது கொடுங்கள் என்று கேட்கிறாள். அந்த சிறுமியை ராஷ்மிகாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். ஆனாலும் அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் ராஷ்மிகா அந்த குழந்தைக்கு எதுவும் கொடுக்காமல் சிரித்துக்கொண்டே சென்று காரில் உட்கார்ந்து விட்டார். இதில் ராஷ்மிகாவின் தவறு ஏதுமில்லை என்றாலும் அவர் அந்தச் சிறுமி நடத்தப்பட்ட விதத்தை அனுமதித்தது நெட்டிசன்களை கடுப்பேற்றிவிட்டது. அந்தக் காணொளியும் வைரலாகி பலரும் ராஷ்மிகா கல்நெஞ்சக்காரர் என சாடி வருகின்றனர். இதை இன்னும் ஊதிப் பெரிதாக்க, பல தெலுங்கு தொலைக்காட்சிகள் அந்த சிறுமியைத் தேடி கேமராவுடன் மும்பை சென்றிருப்பதாகவும் ஆந்திர ஜோதி நாளிதழின் இணையதளம் நக்கலுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: