free website hit counter

அஜித்துடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அஜித்தை மூன்றாம் முறையாக எச். விநோத் இயக்குவது கடந்த ஓராண்டுக்கு
முன்பே முடிவானது. இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். 'வலிமை' படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக ஞாயிறு ஊரடங்கு நடைமுறையில் இருப்பது, 50 விழுக்காடு ரசிகர்களுக்கு மட்டுமே திரையரங்கில் அனுமதி போன்ற கட்டுப்பாடுகளால் வசூல் அடிவாங்கும் என்பதாலும் சில தினங்களில் பைரசி வீடியோ வெளியாகிவிட்டால் படம் தோல்வியைத் தழுவிவிடும் என்பதாலும் பொங்கல் வெளியீட்டிலிருந்து தேதி குறிப்பிடாமல் வலிமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் அலை முடிந்து கட்டுபாடுகள் முழுமையாக நீக்கப்பட்டால் மட்டுமே வலிமை வெளியாகும் என்பதை போனி கபூர் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் அஜித்- எச்.வினோத் - போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் அஜித்தின் 61 வதுபடத்தில் மற்ற நடிகர், நடிகையரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஐந்து தேசிய விருதுகளை வென்றவரும் பான் இந்தியா நடிகருமான பிரகாஷ்ராஜ் இத்திரைப்படத்தில் இணையவிருக்கிறார் என்பதை இயக்குநர் வட்டாரம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆசை, ராசி, பரமசிவன் ஆகிய படங்களில் அஜித்தும் பிரகாஷ் ராஜும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: