free website hit counter

Sidebar

28
, ஜூன்
20 New Articles

‛பிசாசு-2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பிசாசு-2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
‛பிசாசு' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‛பிசாசு-2'. பூர்ணாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

முதல்பாகத்தை போன்று இந்த படமும் திரில்லர் பாணியில் தயாராகி உள்ளது.
இந்நிலையில், பிசாசு-2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதனை புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் சிவப்பு நிற உடையில் ஆண்ட்ரியா காட்சியளிக்கிறார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு முதல் முறையாக நடிகை ஆண்ட்ரியா சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

மேலும், பிசாசு-2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக சில காட்சிகளில் நடித்து இருக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும், மேலும் இப்படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருதும் கிடைக்கும் என்று மிஷ்கின் கூறியிருந்தார்.இதனால், இந்த படத்தைக்காண ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula