free website hit counter

சல்மான் கானுக்கு சரிவைக் கொடுத்த பிரபு தேவா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கோலிவுட்டின் பிரபுதேவாவும் பாலிவுட்டின் சல்மான் கானும் இணைந்தால் அது ஹிட் என்ற நிலை அடுத்தடுத்து இரண்டு படங்களில் நீடித்தது.

அதை நம்பிய பிரபல ஓடிடி நிறுவனம் 135 கோடி ரூபாய்க்கு ‘ராதே’ ஹிந்தி படத்தில் படத்தை வாங்கியது. இது தவிர்த்து அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நடுகள், சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் திரையரங்க வெளியீட்டு உரிமை 105 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியது. பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் கதாநாயகனாகவும் திஷா பதானி கதாநாயகியாகவும் நடித்த இப்படம் கொரோனா பிரச்சனையால் நேரடியாக ஓடிடியை தேர்வு செய்யவேண்டிய பரிதாபமான நிலை.

ஆனால், இந்தப் படத்திற்கு ஓடிடிலும் பார்க்க ஆளின்றி, வெளிநாட்டு வசூலிலும் சொதப்பிவிட்டது. அதற்கு முதல் காரணமாக இந்த படத்தை ஓடிடியில் காண 249 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. படத்திற்கு நீண்டகாலமாக கொடுத்து வரப்பட்ட விளம்பரங்கள், பரப்புரை போன்றவற்றால் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ‘பில்டப் கொடுத்த அளவிற்கு படத்தில் எதுவும் இல்லை, சுமார் ரகம்தான்’ என்று படத்தை பார்த்த நெட்டிசன்கள் விமர்சனத்தை சமூக வலைதளங்களில் தட்டிவிட பிரபுதேவாவுக்கும் சல்மான்கானுக்கு பாகற்காய் கசாயம் குடித்ததுபோல் ஆகிவிட்டது.

மேலும் இந்த அறுவை படத்தை பைரசி தளங்கள் பதிவிட்டபோது அதை டவுன்லோட் செய்தவர்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டவில்லை என பிரபல பைரசி தளம் பதிவிட்டுள்ளதாக நக்கலடித்திருக்கிறார்கள் மும்பை மீடியேட்டகள்.இந்தப் படத்தை ஒடிடி மற்றும் திரையரங்க வெளியீட்டின் வழியாக 80 கோடி ரூபாய் நஷ்டத்தை இந்தப்படம் சந்தித்துள்ளதாக மீடியேட்டர்கள் பதிவிட்டுள்ளனர். மேலும் பிரபுதேவா சல்மான்கான் இருவருடைய பாலிவுட் மார்க்கெட் சரியும் என்றும் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction