free website hit counter

அமெரிக்க திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் ராஜமௌலி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரகன
ி உள்பட பல இந்திய திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் அடுத்த வாரம் மார்ச் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கொரோனா காரணமாக பல முறை இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்பட்டு வந்த நிலையில் இத்திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் அமெரிக்காவில் 1150 இடங்களில் வெளியாக உள்ளதாக படத்தை அங்கு வெளியிடும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“பிரம்மாண்ட ஆக்க்ஷன் டிராமா படம் ஒன்று அமேரிக்காவில் இத்தனை பெரிய வெளியீடு செய்வது இதுவே முதல் முறை. ஷங்கரின் எந்திரன் 1100 திரையரங்குகளில் வெளியான நிலையில் 50 திரையரங்குகள் அதிகமாக 1150 திரையரங்குகளில் வெளியாகிறது” படத் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஒரு நாள் முன்னதாக மார்ச் 24ம் தேதியே அங்கு பிரிமீயர் காட்சிகளும் நடைபெற உள்ளன. அதற்கான முன்பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction