website analysis

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆனார் ராபர்ட் பாட்டின்சன்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகர் ராபர்ட் பாட்டின்சன் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். யார் அக்கதாபாத்திரத்தில் நடித்தாலும் படத்தின் தொடக்கக் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என்பதால் ரசிகர்களின் மிக விருப்பமான திரைப்படங்களின் பட்டியலில் அவற்றிற்கு இடங்கள் உண்டு.

இதுவரை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் நடிகர்கள் சீன் கானரி (Sean Connery), ஜார்ஜ் லேசன்பி (George Lazenby), ரோஜர் மூர் (Roger Moore), திமோதி டால்டன் (Timothy Dalton), பியர்ஸ் பிராஸ்னன் (Pierce Brosnan), டேனியல் கிரெய்க் (Daniel Craig), டேவிட் நிவன் (David Niven) ஆகியோர் நடித்து உலகப்புகழ் பெற்றனர்.

இந்த நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்ட்டாக நடிகர் ராபர்ட் பாட்டின்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தி பேட்மேன், மிக்கி 17, டியூன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தியவர் ராபர்ட் பாட்டின்சன்.

தற்போது, ஜேம்ஸ் பாண்ட் ஆக மாறவுள்ளது தனக்கு வாழ்நாள் சாதனை போல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாண்ட் 26 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை டெனிஸ் இயக்குகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்