free website hit counter

வடிவேலுவுடன் இணைந்த ஷிவானி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சின்னத்திரையில் பிக் ஸ்டாராக வலம் வந்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு
வெளியேறியதும் மீண்டும் சீரியல் பக்கம் திரும்பாமல் படங்களில் நடிப்பதை முழு கவனம் செலுத்தி வருகிறார் . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதியின் மூன்று ஜோடிகளில் ஒருவராக ஷிவானி இருக்கிறார்.மேலும் பொன்ராம் இயக்கும் விஜய் சேதுபதியின் படத்தில் போலீஸ் ரோல் ஒன்றில் நடிக்கும் இவர் இப்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இது குறித்து ஷிவானி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘இவ்வளவு நாட்கள் வடிவேலு அவர்களின் மீம்ஸ் ட்ரோல் படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போது அவருடனே திரையில் ஒன்றாக நடிக்க இருக்கிறேன். ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திற்காக லைகா நிறுவனத் தயாரிப்பில் வடிவேலு சாருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி’ என வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தையும் ஷிவானி பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி யாரும் இல்லை என சொல்லப்படும் நிலையில் ஷிவானியின் கதாபாத்திரம் குறித்து கேட்கத் தொடங்கி விட்டார்கள் ரசிகர்கள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction