2022 புத்தாண்டு கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் நடிக்கும் அவருடைய 20-வது
தற்போதைக்கு ‘SK 20’என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான 'ஜதி ரத்னதாலு' படம் மூலம் புகழ் பெற்ற தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை படத்தின் தயாரிப்பாளர் டி. ராமாநாயுடுவின் மகனான சுரேஷ் பாபு தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதல்முறை. மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.
																						
     
     
    