free website hit counter

சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிவகார்த்திகேயன் தீவிர ரசிகர்கள் ‘டான்’ படத்திற்காக காத்திருந்தார்கள்.

ஆனால், கொரோனா மூன்றாம் அலையால், படம் தயாராகியும் வெளியிட முடியாத நிலை தொடர்ந்தது. படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஜலபுல ஜங்கு' வெளியாகி ரசிகர்களை வெறிகொண்டு ஆட வைத்தது. பத்து மில்லியன் முறைப் பார்க்கப்பட்ட இந்தப் பாடல் படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது. இறுதியாக, தயாரிப்பாளர்கள் உலகம் முழுவதும் மார்ச் 25, திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று இன்று அறிவித்தனர்.

‘டாக்டர்’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் அழகான கெமிஸ்ட்ரியை பின் தொடரும் வண்ணம் சிவகார்த்திகேயனும், பிரியங்கா அருள் மோகனும் ‘டான்’ படத்திலும் மீண்டும் இணைந்துள்ளனர். மாநாடு படத்தில் தனது பிரமாண்டமான நடிப்பின் மூலம் திரையுலகையே அசத்திய எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், சிவவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் ‘டான்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சிபி சக்கரவர்த்தி இயக்குனராka அறிமுகமாகும் இந்தப் படத்தை லைகா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: