போனதில்லை!. ‘ரோஜா கூட்டம்’ படத்தின் சசி அறிமுகப்படுத்திய ஸ்ரீகாந்த், பல நல்ல படங்களில் நடித்திருந்தும் அவை சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளன. இந்நிலையில், ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.விஜயகுமார் மற்றும் லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’(The Bed) அவரது திரைப் பயணத்தில் முக்கிய திருப்பமாக அமையும் என தெரிவிக்கிறார் அந்தப் படத்தை இயக்கியிருக்கும் மணி பாரதி!
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் புகழ் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது “சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி இது. ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும், அதைத் தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்தான் படத்தின் கதை. ஸ்ரீகாந்த் ஐ.டி.யில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார். ஜான் விஜய் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமாக ஹீரோ, ஹீரோயின் அல்லது வில்லன்கள் தங்களது பார்வையில் படத்தின் கதையை விவரிப்பது போன்று பல படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தப் படத்தில் ஊட்டி காட்டேஜ் ஒன்றில் உள்ள ஒரு படுக்கை (Bed) தனது பார்வையில் தன்னை தேடி வந்த மனிதர்களின் வாழ்க்கையை விவரிப்பதுபோல இதன் கதையை உருவாக்கியுள்ளோம். அதற்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ‘தி பெட்’ என தலைப்பு வைத்துள்ளோம்” என்றார்.