விண்ணைத்தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ரியல் எஸ்டேட்
அதிபர் எல்ரெட் குமார். அவருடைய வீடு மற்றும் அலுவலங்களில் கடந்த 3 நாட்களாக வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.82 கோடி ரூபாய் ரொக்க பணம், 8.4 கிலோ தங்கம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான இந்திய வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இவர் தன்னுடைய வருமானத்துக்கு முறையாக வருமானவரி செலுத்தாமல், போலியான ரசிதுகள் மூலம் ரூபாய்1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்ரெட் குமார் தவிர, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள சினிமா பைனான்சியர்கள், தொழிலதிபர்கள் வீடுகள், அலுவலகங்கள் என 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினார்கள். மூன்று நாட்கள் நீடித்த இந்த சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டன என்ற விபரம் தற்போது வெளியாகி உள்ளது.