free website hit counter

மாறன் பட பரப்புரையை தனுஷ் தவிர்த்தது ஏன்?

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'மாறன்'. இப்படத்தில்
தனுஷ் ஒரு பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் போட்டோ ஜர்னலிஸ்டாக நடித்துள்ளார். இயக்குநர் அமீர் முக்கிய கதாபாத்திரத்திலும் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமையான மார்ச் 11-ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மாறன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்து நிகழ்ச்சிகள் எதற்கும் தனுஷ் வரவில்லை. மனைவி ஐஸ்வர்யா உடனான பிரிவு தனுஷை மனதளவில் பாதித்துள்ளது என்றும் அத்துடன் மனைவி மருத்துவ மனைவியில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தான் ஊடகங்களில் தோன்றி பேசுவது முறையாக இருக்காது என்றும் சொல்லிவிட்டாராம்.

இன்னொருபக்கம் மாறன் படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என தனுஷ் விரும்பியுள்ளார். ஆனால் தயாரிப்பாளர் தரப்பு படத்தை ஓடிடியில் நல்ல விலைக்கு தள்ளி விட்டுட்டதால் தனுஷ் கடுப்பாகி விளம்பர நிகழ்ச்சிகளை சட்டை செய்யவில்லை என்கிறார்கள். மேலும், மாறன் படத்துக்காக தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை கூட நேற்று அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடவில்லை. முன்னதாக ஜகமே தந்திரம் படத்தையும் திரையரங்குகளில் வெளியிட நினைத்தார். ஆனால் அந்தப் படமும் ஓடிடியில் வெளியானதால் இந்தப் படமாவது திரையரங்கில் வெளியிடுவார்கள் என்று நினைத்துள்ளார். ஆனால் அப்படி நடக்காததால் அவர் இப்படி செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction