தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களில்‘வாத்தி கம்மிங்’நடனப் பாடல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி பின்னர் அந்தக் காணொளிகளை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது மூன்று மகள்களின் முன்னாள் நடனமாடியிருக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகிவருகிறது.
வார்னர் தனது வீட்டில் ஓய்வாக இருக்கும் வேளையில், டிவியில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலை அவரது மகள் ஓடவிடுகிறார், அதைப் பார்த்துக் கொண்டே, விஜய்யின் ஸ்டெப்களை முயற்சித்திருக்கிறார் வார்னர். அதை அவருடைய மனைவி செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பிரபலமாக்கி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    