திரையுலகில் இருந்து அடுத்தடுத்து வெளிவரும் மரண செய்திகள் கடும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
16 வயதே ஆன மீரா பிரபல தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாகவே தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதை அடுத்து இன்று காலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று லாராவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் லாரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விஷயம் தற்போது மீடியாவில் பரவியதை அடுத்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.