free website hit counter

Sidebar

06
செ, மே
61 New Articles

பூமியில் கண்டங்கள் தோன்றிய கதை

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பூமியில் கண்டங்கள் எவ்வாறு  தோன்றியிருக்கலாம்? முக்கிய ஆய்வின் பரிந்துரை

சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தேயா (Theia) என்ற ஒரு செவ்வாய்க் கிரகத்தின் அளவுக்கு ஒப்பான பொருள் பூமியுடன் மோதி பூமியின் நிலவு உருவாகும் அதே தருணத்தில் தான் பூமியில் கண்டங்களும் தோன்றியிருக்கலாம் எனப் புதிய ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான புவிப் பௌதிகவியல் மீளாய்வு ஆவணங்களில் மேலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த மோதுகையின் (collision) போதே பூமியின் கண்டங்களை இணைக்கும் நிலக்கீழ்த் தகடுகள் (Tectonic plates)  மற்றும் சமுத்திரங்களுக்கான எல்லைகள் உருவாகின என்றும் இதன் பின் உயிர் வாழ்க்கைக்கு வசதியாக எரிமலை செயற்பாடுகள் தொடர்ந்து 200 மில்லியன் ஆண்டுகளாக இடம்பெற்றன என்றும் கூறப்படுகின்றது.

இதனை கனணியில் வடிவமைப்பு (Computer Simulation) முறையில் உறுதிப் படுத்தியிருப்பதாக கியான் யுவான் என்ற விஞ்ஞான ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதுகையின் பிரதி விளைவாக Subduction எனப்படும் செயற்பாடு அதாவது பூமியின் மையம் (Core) இன்னமும் வெப்பமான லாவாக்களால் சூழப்பட்டு மேற்பரப்பில் அவ்வப்போது எரிமலை செயற்பாடுகள் மற்றும் நிலநடுக்கம் இன்னமும் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் - நியூயோர்க் டைம்ஸ்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula