free website hit counter

மூலிகை அறிவோம்-கசக்கும் பாகலின் இனிக்கும் மருத்துவம்!

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எம்மில் அநேகம் பேரால் வெறுத்து ஒதுக்கப்படும் ஒரு மரக்கறி என்றால் அது பாகலே தான். அந்த அளவு அதன் கைப்புச் சுவை நமக்கு பிடிப்பதில்லை.
ஆனால் அவ்வளவு கைப்புச்சுவையின் ரகசியமே அது அத்தனை மருத்துவ குணங்களை கொண்டிருப்பது தான். பாகற்காய் ஒரு மரக்கறியே அல்ல; அது ஓர் அற்புத மருத்துவ மூலிகை!
தாவரவியல் பெயர்-Momordica charantia
குடும்ப பெயர்- Cucurbitaceae
ஆங்கிலப் பெயர்- Bitter gourd
சிங்கள பெயர்-kariwila
சமஸ்கிருத பெயர்- Kaaravalli
வேறு பெயர்கள்- காரவல்லி, கூரம், கூலம்
பயன்படும் பகுதி- இலை, பழம், விதை

சுவை- கைப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு

வேதியியல் சத்துக்கள்-
Momordicosides
5-hydroxytryptamine
Charantin
Diosgenin
Cholesterol
Lanosterol
Beta-sitosterol
Sialic acid
Polypeptide
p-insulin
Momordica anti-HIV-protein

மருத்துவ செய்கைகள்-
இலை
Anthelmintic-புழுக்கொல்லி
Antibilious- பித்த சமனி
Emetic- வாந்தியுண்டாக்கி
lactogogue- பால் பெருக்கி
Purgative- பேதியுண்டாக்கி

பழம்
Alternative-உடல் தேற்றி
Anthelmintic- புழுக்கொல்லி
Antibilious-பித்த சமனி
Antiviral- வைரசு கொல்லி
Emetic- வாந்தியுண்டாக்கி
Laxative-மலமிளக்கி
Stimulant-வெப்பம் உண்டாக்கி
Stomachic-பசியைத் தூண்டி
Tonic- உரமாக்கி

விதை
Anthelmintic-புழுக்கொல்லி
Antiviral- வைரசு கொல்லி

வேர்-
Abortifacient- கருப்பைசிதைச்சி
Astringent- துவர்ப்பி

தீரும் நோய்கள் -
இலை
கிருமிரோகம், திரிதோட கோபம்

பழம் -
சுரம், இருமல், இரைப்பு, மூலம், முத்தோஷம், குஷ்டம், குன்மம், மலக்கிருமி, வாதநோய்கள்

வேர்- மூலரோகம்

பயன்படுத்தும் முறை- 35g இலைச்சாற்றை பேதியாக கொடுக்கலாம். இதனால் வாந்தியும் உண்டாகும். பேதியும் வாந்தியும் அளவுக்கு மிஞ்சினால் அதை நிறுத்த நெய்யும் சாதமும் சாப்பிடவும். மிளகை இலை ரசத்துடன் அரைத்து கண்ணை சுற்றி பற்றிட மாலைக்கண் நீங்கும். காந்தல் வாதத்துக்கு, இலைச் சாற்றை உள்ளங்காலில் பூச எரிச்சல் குறையும். ஒரு தேக்கரண்டி இலைச்சாற்றுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து சிறு குழந்தைகளுக்குப் புகட்ட வாந்தி, உணவில் விருப்பமின்மை, ஓக்காளம் நீங்கும். வயிற்றில் உள்ள மாசுக்களை நீக்கி வயிற்றை சுத்தம் செய்யும். இதன் இலைச்சாறு ஆனைப்புளி இலைச்சாறு, பழுத்த வெற்றிலை சாறு, நாவல் பட்டை சாறு இவைகளை சம அளவு சேர்த்து அச்சாற்றில் சிறிது வசம்பு உரைத்து குழந்தைகளுக்கு ஏழு நாள் வரையிலும் கொடுக்க மண்ணீரல், கல்லீரல் கட்டிகள் கரைந்து போகும். காயை சமையல் செய்து அல்லது வற்றலாக்கி வறுத்து உண்பது நாட்டு வழக்கம். பழத்தை வாத நோய், ஈரல் நோய்கள் இவைகளுக்கு ஔடத முறையாக உபயோகிக்கலாம். இதனால் ரத்தம் சுத்தியாகும்; களைப்பு நீங்கும். இலை, பழம் இரண்டையும் சேர்த்து காமாலை, குஷ்டம், மூலம் முதலிய நோய்களுக்கு வழங்கலாம். பழத்தை பிழிந்து சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து புண்களுக்கு பூசுவது உண்டு. மேற்படிச் சாற்றை சர்க்கரை கலந்து குடிக்க சூதக வலி (menstrual pain) நீங்கும். சமூலத்துடன் கருவாப்பட்டை, திப்பிலி, அரிசி, நீரடி முத்தெண்ணெய் சேர்த்தரைத்து அழுகிய புண்கள், சிரங்குகள் முதலிய சரும நோய்களுக்கு பூசலாம். சமூலத்தை உலர்த்தி பொடித்து குஷ்ட விரணங்களுக்கு மேலுக்கு தூவலாம். பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். HIV (நிர்ப்பீடன குறைபாட்டு வைரஸ்) நோயால் பாதிக்கப்பட்டவர்களும் தங்கள் உணவில் பாகற்காயை சேர்த்து வருவதால் அந் நோயை குணப்படுத்த முடியும். ~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction