free website hit counter

செல்லுலைடிஸ் (Cellulitis)

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Cellulitis என்பது ஒரு நுண்ணங்கித் தொற்றாகும். நுண்ணங்கியான பக்டீரியா தோலின் சேதமடைந்த பகுதிகளுக்கூடாக உடலுக்குள் உட்புகுந்து சேதத்தை விளைவிப்பதனால் வரும் விளைவாகும். சாதாரணமாக வருடத்திற்கு 100 000 மக்களில் 200 பேர் இந்நோய் நிலைமைக்கு உள்ளாகின்றனர். சமூகத்தில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் நோய்களில் இதுவும் ஒன்று.

 Cellulitis ஆனது பொதுவாக கீழ் அவயவங்களில் ஏற்படும். அதுமட்டுமின்றி மேல் அவயவம், முகத்திலும் ஏற்படலாம். தோலில் ஏற்படும் கண்புலனாகும் & கட்பலனாகாத சிதைவுகளினூடே நோய் விளைவிக்கும் பாக்டீரியாக்கள் (group A beta-hemolytic streptococci, Staphylococcus aureus, Haemophilus influenzae) உட்புகுகின்றமையினால் இந்நிலைமை ஏற்படலாம். வெட்டுக்காயம், தீக்காயம், தேய்க்காயங்கள், விலங்குத்தீண்டல்கள், அருவை சிகிச்சை காயங்கள் போன்றவை தோலின் சிதைவுக்கு காரணமாகும்.
     

தொற்று ஏற்பட்டவுடன் காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல் மற்றும் 24 மணித்தியாலத்தின் பின்னர் சிகப்பு நிறமாக சேதமடைந்த பகுதி மாறுதல் ஏற்படும்.  மேலும், அரிப்பு, சிவப்பாதல், வெப்பம், நோ என்பன அப்பகுதியினூடு வெளிப்படலாம்.
         

உள் நுழைந்த பாக்டீரியாக்கள் வேகமாக பெருக்கமடைந்து நிணநீர் முடிச்சுக்கள், இரத்தம் என்பவற்றில் பரவலடைந்து உடல் முழுவதும் பரவலடையலாம்.
          

வயது முதிர்ந்தவர்கள், குறைவான நிர்ப்பீடன சக்தி உடையவர்களுக்கு இலகுவாக இந்நிலைமை ஏற்படலாம். நீரிழிவு நோய் நிலைமை Cellulitis க்கு வழிகோலும். எயிட்ஸ் மற்றும் நிர்ப்பீடன சக்தியை குறைக்கக்கூடிய நோய்களாலும் இந்நிலை ஏற்படலாம்.
           

Cellulitis நோய் நிலைமையால் இழைய இறப்புக்கள் நிகழ்ந்து அந்த பாகம் அழியும் நிலையும் ஏற்படும். மற்றும் Septicemia என்று கூறப்படும் நுண்ணங்கி உடல் முழுவதும் பரவி பாரிய உயிர்க்கொல்லியாகவும் மாறலாம்.
             

Cellulitis இனால் உடலில் ஏற்படக்கூடிய வலியையும் நுண்ணங்கிப்பரவலையும் கட்டுப்படுத்த தொற்று ஏற்பட்ட பகுதியை உயர்த்தி வைத்திருத்தல் வேண்டும். மற்றும் வைத்தியரினால் பரிந்துைக்கப்பட்ட  Antibiotics, Analgesic மருந்துகள் பாவித்தல் வேண்டும்.
               

இவ்வாறான நோய் நிலைமையை உணர்ந்தால் வைத்தியசாலையில் நின்று சிகிச்சை பெறுவது சிறந்தது. அல்லது வைத்தியர் ஒருவரை நாட வேண்டும்.
              

இந்நோய்நிலைமையை தவிர்க்க சிறந்த சுகாதாரத்தையும், காயங்களை ஒழுங்காக கவனிப்பதும் அவசியமாகும். எந்த காயங்களையும் முறையாக சுத்தமாகவும் மருந்துக்கட்டியும் வைத்திருத்தல் நன்று. தினமும் காயங்களுக்கு போடப்பட்டிருக்கும் Bandage களை மாற்றி Cellulitis நோய் நிலைமையை குறைக்கலாம். காயங்கள் தொற்றுக்குள்ளாகிய போதும் ஆழமாக உள்ள போதும் வைத்தியரின் ஆலோசனை கேட்பது அவசியமாகும்.
           

"புண் வந்து இன்பெக்சன் ஆகி இறந்துட்டாரு" ன்னு இனி சமூகத்தில் சொல்வதை நிறுத்திவிட்டு முற்காப்புகளின் மூலமும் வைத்தியம் பெறுவதின் மூலமும் உயிர்களை காப்போம்.

 

-ஹுபைப்-

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction