free website hit counter

மூலிகை அறிவோம் - தன் காயம் காக்கும் - வெங்காயம்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாரம்பரிய சமையலில் வெங்காயமின்றிய சமையலையே நாம் காணமுடியாது. உணவுக்கு சுவையூட்டியாக பயன்படுத்தப்பட்டு வரும் வெங்காயத்தின் சிறப்பம்சங்களை இன்றைய மருத்துவ உரையில் பார்க்கலாம்...

தாவரவியல் பெயர்- Allium cepa
குடும்பப் பெயர்- Amaryllidaceae
ஆங்கிலப் பெயர்- Red onion
சிங்களப் பெயர்- ரது_லுணு
சமஸ்கிருதப் பெயர்- பலாண்டு
வேறு பெயர்கள்- ஈருள்ளி, காயம், சுக்கிரந்தம், நிச்சியம்

 பயன்படும் பகுதி - பூ, தாள், விதை,  குமிழ்(Bulb)

சுவை- கைப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு

 மருத்துவச் சத்துக்கள் -
Volatile oil
Allicin
Alliin
Flavonoids
Phenolic acid
Sterols
Diphenylamine

 மருத்துவச் செய்கைகள்-
Anthelmintic-புழுக்கொல்லி
Antibiotic- நுண்ணுயிர்க் கொல்லி
Antispasmodic- இசிவகற்றி
Aphrodisiac -ஆண்மைபெருக்கி
Carminative- அகட்டுவாய்வகற்றி
Demulcent- உள்ளழலாற்றி
Diuretic - சிறுநீர் பெருக்கி
Emmenagogue- சூதகமுண்டாக்கி
Expectorant- கோழையகற்றி
Rubefacient- தடிப்புண்டாக்கி
Stimulant- வெப்பமுண்டாக்கி
Stomachic- பசித்தீ தூண்டி
Tonic- உடலுரமாக்கி

 தீரும் ரோகங்கள்-
ஆஸ்த்துமா
குன்மம்
குடல் நோய்
வயிற்றோட்டம்
தலைவலி
காதுவலி
உடல் வலி
மூட்டு வலி
மூலநோய்
உட்சூடு
சிரங்கு
குருதியழல் நோய்
மாதவிடாய் நோய்கள்
நீர் வேட்கை

 பயன்படுத்தும் முறைகள்-
 பூ
பூவை சமைத்தேனும் குடிநீரிட்டேனும் உலர்த்திப் பொடித்தேனும் வழங்க குன்ம நோய்களையும் குடலைப்பற்றிய நோய்களையும் போக்கும். பூவைக் கசக்கி அதன் சாற்றை கண்களில் விட கண் மங்கல் நீங்கும்.

 கிழங்கு
பச்சை வெங்காயத்தை சாப்பிட அது பெண்களுக்கு சூதகத் தடையைப் போக்கி குருதி சிக்கலை அறுக்கும்; நீரைப் பெருக்கும்.

வெங்காயத்துடன் 2-3 மிளகு சேர்த்துண்ண சுரம்  தணியும்.

வெங்காயத்தை உப்புடன் உண்ண வயிற்றுவலி, குருதியழல் நோய் நீங்கும்.

வெங்காயத்தை குடிநீரிட்டு குடிக்க நீரெரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்க்கட்டு நீங்கும்.

நெய்விட்டு வதக்கி உண்ண உடல் வெப்பம் தணியும்.

இதன் சாற்றை முகர மூர்ச்சை தெளியும்.
காதில் 2-3 துளிவிட காதுநோய் நீங்கும்.

உடலில் பூச பூச்சிக்கடிகள், தேள் கொட்டல் இவற்றாலுண்டாகும் வலி, வீக்கம் ஆகிய நோய்கள் போகும்.

அரிசி கழுவிய நீருடன் கலந்துண்ண தொண்டைப் புண் மாறும்.

இந்நீரை வெங்காய சாற்றுடன் காய்ச்சிக் கொடுக்க காமாலை, வயிற்றுவலி, ஈரல் நோய் ஒழியும்.

கடுகெண்ணெயுடன் கலந்து பூச கீல்வாதம் குணமாகும்.

தனிச்சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

மலாயாவில் வெங்காயத்தின் சாறு மஞ்சள் சாற்றுடன் சேர்த்து குழந்தைகளின் வயிற்றுவலிக்கு கைம்மருந்தாக கொடுக்கப்படுகின்றது.

ஒருநாளைக்கு 50கிராம் வெங்காயத்தை உணவுடன் உள்ளெடுப்பதால் நீரிழிவு நோயாளிகளில் இன்சுலினின் தேவைப்பாடு 40-20 அலகுகள் குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

 விதை
விதையை உலர்த்திப் பொடி செய்து சர்க்கரையுடன் கலந்து 3-4 கிராம் வீதம் தினம் 2-3 முறை உட்கொள்ள குன்மம் குறையும்; ஆண்மை பெருகும்.

 தாள்
இதனை உணவாக சமைத்து சாப்பிட தாகம், மூலச்சூடு, உடல் வெப்பம் தணியும்.


~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction