free website hit counter

மனவழுத்தம் - நீங்களும் ஒரு நோயாளியாக இருக்கலாம்.

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனவழுத்தம் என்றதும் அனேகமானவர்கள் அதை ஒரு நோயாக அல்லாமல் தற்காலிகமானதொரு state of mind ஆக கருதுவதைக் காணலாம். மனவ ழுத்தத்திற்குள்ளானவர்கள் தாமாக உணர்ந்து மீள்வதன் மூலம் மாத்திரமே இந்நிலையிலிருந்து வெளிவரலாம் என்ற தவறான சமூக கண்ணோட்டம் மாற வேண்டும்.

காரணம், மனவழுத்தம் என்பது பிற நோய்களைப் போன்று உடல் உள நலத்தைச் சீர்குலைக்கும் கொடியதொரு நோய். ஆனால் ஒருவர் மனதளவில் டிப்ரஷனுக்குள்ளாவதை எக்ஸ் ரேக்களாலோ கமராக்களாலோ இனங்காண முடியாது மாறாக அவரது நடத்தை மாற்றங்கள், எண்ணவோட்டங்கள், பேச்சில் ஏற்படும் மாறுதல்களை உன்னிப்பாக அவதானிக்கும் நெருங்கிய நபரொருவராலேயே சரியாக இனங்கான முடியும்.

இன்றைய நாளின் சர்வதேச பிணிச் சுமைச் சுட்டி (GBD) யின் படி, முதன்மையான சுமைக் காரணிகளுள் ஒன்றாக மனவழுத்தம் இடம் பிடித்திருக்கிறது. பொதுவாக இளம் சமுதாயத்தினரையும் குறிப்பாக 25 + வயதை எட்டியவர்களையும் பிடித்தாட்டும் இந் நோய் ஆண், பெண் என பால் வித்தியாசமின்றி அனைவரினதும் வாழ்க்கையை, குடும்பம், கல்வி, எதிர்காலத்தை என ஒவ்வொன்றாக அழிக்கவல்லது. அண்மை வருடங்களில் அதிகரித்துவரும் தற்கொலைச் சம்பவங்களை அதிகம் செவியுறுகிறோம். மனவழுத்தம் பற்றிய அறிவை முறையாகப் பெற்றுக் கொள்வதன் மூலம் உங்களையும் உங்களைச் சூழ வுள்ளவர்களையும் காத்துக்கொள்ளலாம்.

மனவழுத்தத்துக்கு உள்ளானோர் Classical triad என்ற மூன்று முக்கிய அறிகுறிகளைக் காட்டுவர்.ஒருவரிடம் Low mood, Anergia (துடிப்பற்ற/ சக்தியற்ற தன்மை), Anhedonia (எதிலும் ஆர்வமற்றிருத்தல்) ஆகியவை தொடர்ச்சியாக இருவாரங்களுக்கு மேலாக இருக்குமானால் அவரை கண்காணிப்பில் வைத்துக்கொள்வது நல்லது. காலைவேளைகளிலும் இரவிலும் காரணமின்றி மிகச் சோர்வாக காணப்படுபவராகவும், இரவில் தூக்கமின்மை ( Insomnia) அல்லது நீண்ட தூக்கம் (hypersomnia) கொள்பவராகவும் தெரிவார். சதாவும் தன்னை தோல்வியுற்றவராக அல்லது பெறுமதியற்றவராக கருதுவார். Pessimism அவரது வார்த்தைகளிலும் செயல்களிலும் தெளிவாக வெளிப்படும். சிலவேளைகளில் Ideas of guilt மேலெழுவதைத் தவிர்க்க முடியாதவராக புலம்புவதைக் காணலாம். சுய அக்கறை, சுயம் சார்ந்த விடயங்களில் ஆர்வமற்று இருப்பதால் தோற்றத்தில் பொலிவிழந்து, உடல் மெலிந்து, பார்ப்பதற்கு துயர்தரும் நிலையிலிருப்பார். அரிதாக, வெளித் தோற்றத்திற்கு போலியாக சிரித்த முகத்துடனும் குதூகலமாக இருப்பவர் போன்றும் நடிப்பவராக இருக்கலாம்.

இவ்வாறான ஒருவர் உங்கள் பக்கத்திலேயே இருக்கலாம் அல்லது உங்களுக்குள்ளேயே இருக்கலாம். மனவழுத்தத்திற்கு நிச்சயமாக மூல காரணிகள் இருக்கும் (triggers) உதாரணமாக நெருங்கிய ஒருவரின் இழப்பு,போதைக்கு அடிமையாதல், பெரும் தோல்வியை அண்மையில் சந்தித்திருத்தல் அல்லது உறவு முறைகளில் (relationships) தகராறுகள், சமூக அழுத்தங்கள் போன்றவை காரணமாக சாதாரண நபர்கள் வேறுபட்ட அளவில் துயரம் அனுபவிப்பவர்களாக இருந்தாலும் மனவழுத்தம் எனும் கட்டத்தை அண்மிக்கும்போது அது இழப்பிற்குரிய சமாந்தரத்தன்மையை விட்டும் விலகி உடலையும் உளத்தையும் ஆழமாக பாதிக்கிறது.

மனவழுத்தம் என சந்தேகிக்குமிடத்து நீங்கள் செய்ய வேண்டிய முதலாவது உதவி அவரை மனநல நிபுணரிடம் (psychiatrist) கொண்டுசெல்வதாகும். உங்கள் உறவை பலப்படுத்தி அவரோடு நெருங்கிச் சொல்லாடும் நேரத்தை அதிகப்படுத்துங்கள். அவரது சிந்தனைகள், சவால்களை செவிதாழ்த்திக் கேளுங்கள். Be a good listener, then a good problem solver. அவரை தனிமையில் விடுவதைக் தவிருங்கள். அவரது worth, self esteem, importance ஐ உணர்த்துங்கள். நீங்கள் பழகிய, உறவாடிய அதே பழைய நண்பரை மீட்டெடுங்கள்.


- மருத்துவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction