ஜேசன் டெக்கெய்ர்ஸ் டெய்லர் (Jason deCaires Taylor) எனும் சிற்பி ஆழ்கடல் அருங்காட்சியம் மற்றும் காண்காட்சி அமைப்பதில் நன்கு அறியப்பட்டவர்.
அவரது சமீபத்திய திட்டம், ஆழ்கடல் நீருக்குள் தனித்துவமிக்க சிற்பங்கள் அடங்கிய அருங்காட்சியகம் அமைப்பதாகும்.
மத்திய தரைக்கடலில் உள்ள சைப்ரஸ் நாட்டின் - அயியா நாபா கடலில் <MUSAN> எனப்பெயரிப்பட்ட அருங்காட்சியம் ஒன்றினை ஜேசன் உருவாக்கியுள்ளார். அதாவது அயியா நாபாவின் கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியம் இப்பகுதியின் சுற்றுலாவுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது.
MUSAN எனப்படுவது ஆழ்கடல் காடு அதன் அழகு நிறைந்த கதையைப்பற்றி சொல்லவதாக விவரிக்கப்படுகிறது.

இந்த ஆழ்கடல் காட்டில் மரங்கள், விளையாடும் குழந்தைகள் விசித்திரமான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய 93 சிற்ப கலை அம்சங்கள் நிறைந்துள்ளது. டெக்கெய்ர்ஸ் டெய்லரின் அனைத்து சிற்பவேலைகளை போலவே, இந்த திட்டமும் நம்பமுடியாத டைவிங் அனுபவத்தை வழங்குவது மட்டுமல்லாமல், கடலுக்கு அடியில் வாழ்வதற்கான வாழ்விடத்தையும் உருவாக்க உதவுகிறது.
ஒவ்வொரு சிற்பமும் கடல் சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு pH நடுநிலைப் பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக குறைந்துவிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு இந்த கட்டமைப்புகள் ஒரு புதிய வீடாக செயல்படும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்தளம் எனும் எண்ணத்தைதாண்டி பல கடல் உயிரினங்களுக்கு ஒரு புகலிடமாக இவ்விடம் இருக்கும் எனவும் மேலும் அப்பகுதியில் பல்லுயிர் வளர்ச்சிக்கு பங்களிக்கும் எனவும் மீன்வள மற்றும் கடல் ஆராய்ச்சி துறை கூறியுள்ளது.

கலைப் படைப்புகள் இயற்கையுடன் தொடர்பு கொண்டு மக்களை கடல் சூழலின் பாதுகாப்புக்குள் நெருக்கமாக கொண்டுவரும் இவ்வாறான ஆழ்கடல் அருங்காட்சியங்கள் ஓர் புதிய உயிரோட்டமான சுற்றுலா அனுபவம்தான்.
இணையத்தளம் : musan
பேஸ்புக் : facebook.com/MUSANAyiaNapa
ஜேசன் டெக்கெய்ர்ஸ் டெய்லரின் பேஸ்புக் பக்கம் : facebook.com/jasondctaylor/
மூலம் : mymodernmat
