அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் மதிப்பிப்பின் படி உலகில் 1,500க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் உள்ளன. இவை அனைத்திலும், உடல் ரீதியாகத் தொடாமல் இசைக்கக்கூடிய ஒரே ஒரு இசைக்கருவி - வினோதமாக ஒலிக்கும், 'தெர்மின்'(Theremin).
இது சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக இருந்து வந்தாலும், இன்னும் பயன்படுத்தப்படாத ஆற்றல்கள் ஏராளமாக இருப்பதாக பலர் நம்புகிறார்கள்.
தோற்றத்தில் எளிமை
பெரும்பாலான இதன் மாதிரிகள் இரண்டு உலோகக் குழாய்களைக் கொண்ட ஒரு பெட்டியைக் கொண்டிருக்கும்; ஒன்று பெட்டியின் மேலே நேராக நிற்கிறது, மற்றொன்று வளைந்து, பெட்டியின் எதிர் பக்கத்தில் U- வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தெரெமின் மின்னணு கருவியாக வரையறுக்கப்படுகிறது. இந்த அமைப்பு இரண்டு ஒலி-அலை அதிர்வெண்களில் அலைவுகளை உருவாக்குகிறது. இது மனிதனால் கேட்கக்கூடிய வரம்புக்கு மேலே உள்ளது.
இசை உருவாக்கம்
இதை இசைக்க, ஒருவர் ஒரு கையையோ அல்லது தடியையோ பெட்டியின் மேலே நகர்த்துவார். இது செவிக்கு புலப்படாத அதிர்வெண்களை மாற்றி, இயக்கம் முன்னேறும்போது நமது கேட்கும் வரம்பிற்குள் ஒலிகளை உருவாக்கும்.
வரலாறு
1920 களில் ரஷ்ய பொறியியலாளரும் இயற்பியலாளருமான லியோன் தெரெமின் என்பவரால் இந்த தெரெமின் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதை கிட்டத்தட்ட தற்செயலாகவே உருவாக்கினார்.
"[தெரெமின்] ஒரு இளம் விஞ்ஞானியாக ரஷ்யாவில் ஒரு ஆய்வகத்தில் பணிபுரிந்தார், உண்மையில் வாயுக்களின் அடர்த்தியை அளவிட ஒரு எரிவாயு மீட்டர் பணியில் ஈடுபட்டிருந்தார். இதன்போது அவர் தனது கையை எரிவாயு மீட்டருக்கு அருகில் கொண்டு வந்தபோது, அவர் ஒருவித உயர்ந்த அலறல் சத்தத்தைக் கேட்டார். அவர் தன் கையை மீண்டும் இயந்திரத்திலிருந்து விலக்கியபோது, அது மெதுவான அலறல் சத்தமாக இருந்தது. இதனைத்தொடர்ந்து அவர் இப்பொருளின் மீது மெல்லிசைகளை இசைக்கத் தொடங்கினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆய்வக உதவியாளர்களும் ஆய்வகத்தில் இருந்த அவரது முதலாளியும் கூடி, இது அற்புதம்' எனக்கூறி வரவேற்றதாக;" வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆல்பர்ட் கிளின்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தெரெமின் வாசிப்பதற்கு துல்லியமும் பயிற்சி பெற்ற காதுகளும் தேவை, எனவே இசை அனுபவம் மிகவும் உதவுகிறது. முதல் திறமையான தெரெமின் வாசிப்பாளர்களில் கிளாரா ராக்மோர் ஒருவர். கிளாசிக்கல் பயிற்சி பெற்ற வயலின் கலைஞரான அவர், தசைநாண் அழற்சி நோய் தனது bow ஏந்தும் கையை பாதித்தபோது வாசிப்பதை விட்டுவிட்டார். எனினும் விதி அவரை விஞ்ஞானி தெரெமினை சந்திக்கவைத்தது. அவரது புதிய இசைக்கருவியை ஏற்றுக்கொண்டார், மேலும் காலப்போக்கில், அவரது இசை நிகழ்ச்சிகளால் மிகவும் அடையாளம் காணக்கூடிய முகமாக மாறினார். இந்த இசைக்கருவியின் சாத்தியக்கூறுகளை மேலும் விரிவுபடுத்த ராக்மோர் தெரெமினுடன் இணைந்து பணியாற்றினார்.
தெரெமின் நவீன இசையில் தொடர்ந்து இடம்பிடித்தது. 1967 ஆம் ஆண்டில், பால் டானர் என்பவர் எலக்ட்ரோ தெரெமினைக் கண்டுபிடித்தார், இது தெர்மினின் ஒலிகளைப் பிரதிபலிக்கும் ஒரு கருவியாகவும் மேலும் உயர்ந்த பிட்சுக்கு பொறுப்பாகும் செயல்பட்டது. அக்கால சில ஆங்கில இசை ஆல்பங்களில் தெரமின் பயன்படுத்தப்பட்டது. மேலும் இடைக்கால ஆங்கில தொலைக்காட்சி நாடகங்கள் சிலவற்றிலும் இக் கருவி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
இப்போதெல்லாம், அவ்வளவு பிரபலமாக இல்லாவிட்டாலும், தெர்மின் பிரபலமான கலாச்சாரத்திற்கு ஒரு வாகனமாக சேவை செய்து வருகிறது.
தெரெமினால் உருவாக்கப்பட்ட இசை அதன் வரலாற்றைப் போலவே தனித்துவமானது, மேலும் அதன் சாத்தியக்கூறுகள் பல்வேறு வகைகள் மற்றும் தலைமுறைகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்களை ஊக்கப்படுத்தியுள்ளன.
source : mymodernmet