உலகப் பொருளாதார மன்றத்தின் இந்த ஆண்டிற்கான கலந்துரையாடல்கள் இந்த வாரம், சுவிற்சர்லாந்தின் மலைச்சுற்றுலா நகரமான டவோஸில் நடைபெறுகிறது.
உக்ரைன் போர், கிரீன்லாந்து தொடர்பான மோதல், வெனிசுலா மற்றும் ஈரானின் அமெரிக்காவின் தலையீடு எனப் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த சூழலில், உலக பொருளாதார மன்ற (WEF) டாவோஸ் கூட்டங்கள் தொடங்குகின்றன.

இவ்வாறான நிலையில் ,"உரையாடலின் சாத்தியம்" என்று தலைப்பிடப்பட்டுள்ள 2026 க்கான பதிப்பின் நோக்கம் நிறைவேறுமா எனும் அச்சநிலையிலேயே உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையிலான குழுவினர் இன்று சுவிற்சர்லாந்துக்குப் பணமாகியுள்ளனர்.
