தேமுதிக தலைவர் விஜயகாந், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு உடனடியாகப் பரிசோதனைகள் மேற்கொண்டு தீவிர சிகிச்சை சிகிச்சை அளித்து வருவதாகவும், தொடா்ந்து அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தேமுதிக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    