free website hit counter

தலயும் தளபதியும் சந்திப்பு!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

திரையுலகின் தல அஜித் என்றால், கிரிக்கெட் உலகின் தல என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் இந்திய கிரிக்கெட் அணியுஇன் முன்னாள் கேப்டனான தோனி.

இவர் சில நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற பயிற்சி பெறுவதற்காக சென்னை வந்துள்ளார். அதே நேரத்தில் தளபதியின் பீஸ்ட் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தோனியின் விளம்பர படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடந்தது. அங்கே தளபதி விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதை அறிந்த இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க ஆவல் கொண்டிருந்திருக்கிறார்கள். இது கோகுலம் ஸ்டுடியோ ஃப்ளோர் மேனேஜருக்கு தெரிய வந்ததும் இருவரையும் சந்திக்க வைத்துள்ளார். தோணியைச் சந்தித்தபோது தனது காரா வேனுக்கு வந்து தேநீர் அருந்த வரும்படி விஜய் தோணியை அழைத்துள்ளார். அதை ஏற்ற தோணி விஜய்யின் அன்பான உபசரிப்பில் நெகிழ்ந்துள்ளார். அந்த சந்திப்பில் இருவரும் 30 நிமிடங்களுக்குமேல் மனம் விட்டுப் பேசியுள்ளனர். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியாகி பிரபலமாகி வருகின்றன. ‘உண்மையான தலையைச் சந்தித்தார் தளபதி’ என்று விஜய் ரசிகர்கள் சிலர் அஜித் ரசிகர்களைச் சீண்டி வருகின்றனர்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: