free website hit counter

மு.க.ஸ்டாலின் என்னை பார்க்க மறுக்கிறார்! கதறும் தளபதி விஜய்யின் அப்பா!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சத்தியராஜ் மகன் சிபிராஜ் நடித்த ‘மாயோன்’ என்ற படத்தின் இசை வெளியிட்டுவிழா இன்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொள்ள வந்திருந்த தளபதி விஜயின் அப்பா,

பத்திரிகையாளர்களிடம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் அவர், “கலைஞருக்கு நிகரான ஒருவர் தமிழக அரசியலில் இல்லை என்றே கூறலாம்.  எப்போது அவரை பார்க்க வேண்டும் என்றாலும் முன் அனுமதி பெறாமல் செல்லாம். ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்றால், என்ன மாதிரியான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு வாரத்திற்கு முன் அனுமதி கேட்க வேண்டும், அவர்கள் சொல்கிற நேரத்துக்குச் சென்று, அவர்கள் அழைக்கும்வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு முற்றும் நேர் மாறான தன்மையுடைவர் கலைஞர்.

.திடீரென்று கலைஞரை பார்க்க வேண்டும் என்றால், சண்முகநாதனுக்கு ஒரு ஃபோன் போட்டு, கலைஞரை பார்க்க வேண்டும் என்று சொல்வேன். அவர், “என்னய்யா திடீர்னு இப்படி சொல்ற, நிறைய அப்பாயிண்மெண்ட் தலைவருக்கு இருக்கே” என்பார். நான், “அண்ணே வீட்டுக்கு வரேன், கலைஞரை முடிந்தால் பார்க்கிறேன், இல்லை என்றால் போகிறேன்” என்று சொல்வேன். கலைஞர் வீட்டிற்குச் சென்ற உடன் அவர், கலைஞரிடம் போய் சொல்வார். மிக சில நிமிடத்திலேயே அவர் என்னை அழைப்பார். என்ன உதவி என்றால் அந்த ஸ்பாட்டிலேயே செய்வார்.  அந்த விதத்தில் அவரை யாரும் ஓவர்டேக் செய்ய முடியாது. மிக அன்பாக நண்பர்களைப் பார்த்துக்கொள்வார். அந்த வகையில் என் வயதுக்கு கலைஞருடன் பேசுவது என்பது மிக எளிதாக இருந்தது.

 தற்போது ஸ்டாலின் சார் மிக நல்ல முறையில் ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். நண்பர்கள் மட்டத்தில் பேசும்போது அதே கருத்தைத்தான் கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் உதயநிதிக்கு அடுத்த நாளே வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து தெரிவித்தேன். என்ன இருந்தாலும் முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் உதவியாளரிடம் அனுமதி கேட்டேன். கலைஞரை சந்திக்க வேண்டும் என்றால் ஒருமுறை அனுமதி கேட்டால், சில நாட்களிலேயே நம்முடைய தொலைபேசிக்கு கூப்பிட்டு இந்த நாளில் வர வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் ஸ்டாலினை பார்க்க அனுமதி கேட்டு 6 மாதம் ஆகிறது. இதுவரை கிடைக்கவில்லை.” என்றார்.  ‘இவரைப்போல் விளம்பர விரும்பியை ஸ்டாலின் தவிர்ப்பது ஒன்றும் அதிசயமல்ல’ என்று பத்திரிகையாளர்கள் அவர் கடந்து சென்றதும் பேசிக்கொண்டு சிரிக்கவும் செய்தார்கள்.

4தமிழ் மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction